இப்போது புதுச்சேரி பட்ஜெட்டுக்கு என்ன தேவை?

அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

முதலில்.

  1. புதுச்சேரி வளர்ச்சிக்கு, வல்லுநர்களை கொண்ட வளர்ச்சி குழு அமைக்க வேண்டும்.
  2. நிதிப்பற்றாக்குறை போக்க வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.
  3. வரி வருவாயை பெருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
  4. வீட்டு வரி, குடிநீர் வரி, கேபிள் வரி, மின்சார வரி, தொழில் வரி,  சொத்து வரி, மனை வரி,  ஆகியனவை புதிய கணக்கெடுப்பின்படி வரி சீரமைக்க வேண்டும்.
  5. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோரின் உண்மையான கணக்கெடுப்பு நடத்தி அவர்கள் மட்டுமே அரசு சலுகைகளை பயன்படுத்த செய்ய வேண்டும்.
  6. 14 வது தீர்மானமாக, மாநிலத் தகுதி கேட்டு சட்டமன்றத்தில் அழுத்தம் திருத்தமாக தீர்மானம் போட்டதோடு விட்டு விடாமல், மாநில தகுதி பெற வேண்டும்.
  7. சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழு அமைத்து, பிரெஞ்சு இந்திய ஒப்பந்தப்படி  100 சதவீத நிர்வாக மான்யம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  8. தற்போது மத்திய அரசு அளிக்கும் மான்யம், இவற்றை ஆய்வு செய்து டில்லி மூத்த வழக்கறிஞரை நியமனம் செய்து,  நமது மாநில உரிமை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  9. பஞ்சாயத்து தேர்தலை நடத்தவும், அதற்கு உண்டான நிதியை பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  10. பஞ்சாலைகள், தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகள், கூட்டுறவு சர்க்கரை ஆலை, கூட்டுறவு நூற்பாலைகளை, புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  11. சிறப்பு பொருளாதார  மண்டலத்துக்கு ஒதுக்கிய நிலத்தில், சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  12. கடலோர பகுதி என்பதால், கடல் மட்டம் உயரும் ஆபத்து உள்ளது.இதற்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசுக்கு சிறப்பு நிதி கேட்க வேண்டும்.
  13. ஆடம்பர திட்டங்களில் கவனம் செலுத்தாமல், அவசியமான திட்டங்களில் கவனம் செலுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  14. மத்திய அரசு மாநில கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்த வேண்டும்.
  15. வது நிதிக் குழுவில் நமது மாநிலத்தை சேர்க்க வேண்டும்.
  16. மத்திய உள்துறை நிதி ஒதுக்கீட்டில், அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைக்க வேண்டும்.
  17. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை காலதாமதப் படுத்தாமல் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  18. உள்நாட்டு உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  19. கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த கூட்டுறவு அமைப்புகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  20. கூட்டுறவு ஆலோசனை குழு அமைக்க வேண்டும்.
  21. சேவை பெறும் உரிமை சட்டம் அமல்படுத்த வேண்டும்.
  22. தலைமை தகவல் ஆணையர் அலுவலகம் வேண்டும்.
  23. ஊழலை முற்றிலுமாக ஒழிக்க, லோக் பால் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்..

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்.

ஆம் ஆத்மி கட்சி.

புதுச்சேரி.

 

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »